சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வ கணபதியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் சேலம் குரங்கு சாவடி பகுதியில் செவ்வாயன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் விலை 75, டீசல் விலை 65 ஆக குறைக்கப்படும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். தேர்தல் நேரத்தில் மட்டுமே மோடி தமிழ்நாடு வருகிறார். தேர்தல் முடியும் வரை மோடி தமிழ்நாட்டில் தங்கினாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.