districts

img

ஸ்மார்ட் சிட்டி பணி : குட்டைகளாக மாறிய சாலைகள்

சேலம், டிச.31- சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக் காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளால் தற்போது மழைநீர் தேங்கி குட்டைகளாக காட்சியளிக்கிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பல் வேறு பணிகளுக்காக தோண்டப்படும் குழி கள், முறையாக மூடப்படாமல் அப்படியே  விட்டு விடுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வியாழ னன்று மிதமான மழை பெய்த நிலையில், பல இடங்களில் சாலையேங்கும் மழைநீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்தது.

குறிப்பாக, சேலம் நால் ரோடு அருகே உள்ள சத்திரம் பிரதான சாலையில் சாக்கடை நீரு டன் மழைநீர் தேங்கி குளம்போல் நின்றது. இதனால், அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ஆகவே,  தோண்டப்பட்ட சாலைகளை சீரமைத்து பாதுகாப்பான பயணத்தை உத்தரவாதப் படுத்த வேண்டும் என மாநகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.