districts

img

சதாப்தி எக்ஸ்பிரஸை ரத்து செய்யக் கூடாது பி.ஆர். நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

சேலம், நவ.24 - தமிழகத்தின் ஒரே ரயிலாக செயல்பட்டு வரும் சதாப்தி எக்ஸ் பிரஸ்யை ரத்து செய்யக்கூடாது என கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந் தித்த பி.ஆர்.நடராஜன் எம்.பி., மேலும் கூறுகையில், தமிழகத்தின் ஒரே ரயிலாக, சதாப்தி எக்ஸ்பிரஸ் கோவை சென்னை மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன் பாடு குறைந்துள்ளது என காரணம் காட்டி வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் அந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த முடிவை ஏற்க முடியாது.

எனவே, தென்னக ரயில் வேயின் இந்த முடிவினை மறுபரி சீலனை செய்ய வேண்டும். மேலும், கடந்த காலத்தில் இயங்கி வந்த கோவை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கேஜ் கன்வென்ஷன் என பெயர் மாற்றப்பட்டும் கூட இன்னும் செயல் படாமல் இருப்பது சரியல்ல. எனவே, மீண்டும் அந்த ரயிலை பொள் ளாச்சி ராமேஸ்வரம் வழியாக செயல்படுத்த வேண்டும். அதே போல் கடவு எண் 6, கடவு எண் 7 பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் பொதுமக்கள் உபயோகத்திற்காக சப்வே அமைக்க கடந்த காலத் தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவினை உடனடியாக அமல் படுத்த வேண்டும்.  கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த பேசஞ்சர் ரயில் கள் அனைத்தும் ரத்து செய்யப்பட் டுள்ளது.

தற்பொழுது நோய்த் தொற்று காலம் படிப்படியாக குறைந்து உள்ள நேரத்தில் அந்த ரயில்கள் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகிறது. ஏழை எளிய நடுத் தர மக்கள் பயன்படுத்தி வந்த அந்த பயணிகள் ரயிலில் சிறப்பு ரயில் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்படுவது சரி யல்ல. எனவே, மீண்டும் மிகக் குறைந்த விலையில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில ளித்த அதிகாரிகள், மேற்கண்ட கோரிக்கைகள் மீது திங்கள் முதல் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு பணி கள் தொடரப்படும் என உறுதியளித் தனர். இப்பேச்சுவார்த்தையின் போது, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பி னர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட அதி காரிகள் உடனிருந்தனர்.

;