districts

மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், டிச. 12- மகளிர் சக்தி விருது பெற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறதென சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்ட தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன் முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத் தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்க ளிப்பு பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும், நிறுவனங்களுக் கான விருதிற்கு ரூ.2 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங் கப்படும்.

 இதற்கான தகுதிகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narishaktipuraskar.wcd.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப் பட வேண்டும். விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 2021ஆம் ஆண்டு ஜன. 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

;