சேலம், பிப்.24-
அரசு ஊழியராக அறி விக்கக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தினர் மூன்றா வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மறைந்த தமிழக முன் னாள் முதல்வர் ஜெயல லிதா, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் சட்ட மன்றத்தில் சிறப்பு விதி 110ன் கீழ் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்பு தற் போது வரை நிறைவேற்றப் படவில்லை. ஆகவே, அங் கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக அறி விக்க வேண்டும். பணி ஓய்வு பெறுகின்ற போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்ச மும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அங்கன் வாடி மற்றும் உதவியா ளர் சங்கத்தினர் புதனன்று மூன்றாவது நாளாக காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் அங்கன் வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சரோஜா, சிஐடியு மாவட்டச் செயலா ளர் டி உதயகுமார், மனோன் மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் கலந்து கொண்ட னர்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு அங்கன் வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. கவிதா தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலா ளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட்டப் பொருளாளர் எம்.ஈஸ்வரி, ஏ.தெய் வானை, எஸ்.முருகம்மாள், எஸ்.ராஜம்மாள், டி.சுமதி, என்.தெய்வானை, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.அங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு அங்கன் வாடி ஊழியர் சங்க சென் னிமலை ஒன்றியத் தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.மணிமாலை, மாவட்டத் தலைவர் ராதாமணி, மாவட்டச் செயலாளர் எஸ்.சாந்தி, மாவட்டப் பொரு ளாளர் எஸ்.அமுதா, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், முருகையா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.மணிபாரதி உள் ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் சாந்தி, செயலாளர் அலமேலு மங்கை, பொருளாளர் ஸ்டெல்லா ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இப்போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம், பல்ல டம் சாலையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் மாநிலத் துணைத் தலை வர் எம்.பாக்கியம், மாவட்டச் செயலாளர் எல்லம்மாள் உட்பட 400க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.
நீலகிரி
உதகையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சங்க நிர்வாகி சசிகலா தலைமை வகித்தார். சிஐடியு மாநில செய லாளர் கே.ரங்கராஜன், மாவட்ட செயலா ளர் ஆர்.ரமேஷ், சிபிஎம் தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.கண்ணகி தலைமை வகித்தார். இதில், மாநில துணைத் தலை வர் ஜெயக்கொடி, மாவட்டப் பொருளாளர் எம்.பூங்கொடி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் ந.வேலுசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தீபம் ஏற்றி, முக்காடு அணிந்து போராட்டம்
கோவையில் செவ்வாயன்று இரவு ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசே 110 விதியின் கீழ் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்று எனக்கூறி கைகளில் தீபம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச்சியாக புத னன்று அனைவரும் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.