districts

img

வீட்டில் நகை திருடிய இளைஞர் கைது: 15 சவரன் நகை பறிமுதல்

அம்பத்தூர், மே 17- ஆவடி அருகே வீட்டில் புகுந்து தங்க நகைகளை திருடிய இளைஞரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  ஆவடி அருகே திரு நின்றவூர், நெமிலிச்சேரி நாகத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் தனியார் நிறு வன ஊழியர். இவரது மனைவி அலமேலு மங்கை (43). இந்த நிலையில் கடந்த மாதம் முருகேசன் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற னர். அப்போது வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், ரொக்கப்பணத்தை திருடி சென்றார். புகாரின் அடிப்படையில் திரு நின்றவூர் காவல் ஆய்வாளர் சாய் கணேஷ் தலை மையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (25) என்பவரை காவல் துறை யினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிட மிருந்து 15 பவுன் தங்க நகை களை பறிமுதல் செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர்.