districts

தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்க தொழிலாளர்கள் எதிர்ப்பு

சென்னை, செப். 12 - தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்க கூடாது  என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் பேரவை சனிக்கிழமை அன்று (செப்.10) தாம் பரத்தில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சிகளில் தூய்மை உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த முறையில் விடுவதை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 624 ரூபாய் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி,  பணிப் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.குமாரதாசன் தலைமை தாங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன் தொடக்க வுரை யாற்றினார். செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையும், பொருளாளர் கே.நடராஜன் வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அப்பனு நிறைவுரையாற்றினார். சங்கத்தின் தலைவராக முருகேசன், செயலாளராக என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக தி.தனசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.