districts

img

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி திருப்போரூரில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஜூலை 25-

      தமிழ்நாடு அரசின் நகர்ப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் திருப்போரூர் பேரூராட்சி மக்களுக்கு வேலை வழங்கிட வலியு றுத்தி  விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

   செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் பேரூராட்சி யில் வசித்து வரும் ஏழை,  எளிய மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அரசு,  மாவட்டத்திற்கு ஒரு  பேரூராட்சி என்ற வகையில்  நகர்புற வேலை வாய்ப்பை  வழங்கி வருகின்றது. இத்திட்டம் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி யில் மட்டும் அமல்படுத்தப் பட்டு செயல்பட்டு வருகிறது.

   இந்நிலையில் மற்ற பேரூராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப் படும் என அரசு அறிவித் திருந்த நிலையில் அதிகரித்துவரும் விலை வாசி உயர்வின் காரணமாக தினம் பாதிக்கப்பட்டு வரும் திருப்போரூர் பேரூராட்சி மக்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை எடுத் திட வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றியத்  தலைவர் எம்.விக்னேஷ்  தலைமையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோரிக்கை களை விளக்கி சங்கத்தின்  மாவட்டத் தலைவர் பி.சண் முகம், ஒன்றிய  செயலாளர் ஜி.பொன்னப்பன், பொருளா ளர் இ.தமிழ்செல்வி,  துணைத் தலைவர்கள்  ஆர்.சீதா, என்.வள்ளி, துணை  செயலாளர்கள் ஒய்.ஜெய லட்சுமி, எ.தனசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச்  செயலாளர் எம்.செல்வம் ஆகியோர் பேசினர். முன்ன தாக பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர் ஆகி யோரிடம் கோரிக்கை மனுக் களை வழங்கினர்.

திருக்கழுக்குன்றம்

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல்அலுவலரை சங்கத்தின் மாவட்ட செயலா ளர் க.புருஷோத்தமன், வட்ட செயலாளர் ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்ட செயலாளர் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.