districts

img

கலைஞர் முத்தமிழ் தேர் ஊர்திக்கு வரவேற்பு

திருவண்ணாமலை, டிச.1- திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா முத்தமிழ்த் தேர் (நினைவு பேனா ஊர்தி) வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்கேபி கல்வி குழுமத்தின் தலைவரும், திமுக மாநில பொறியாளர் அணி செயலாளர்,  கு.கருணாநிதி வரவேற்றார். இதில் பங்கேற்ற சட்டப்பேரவை துணைத் தலைவர்  கு.பிச்சாண்டி, கலைஞரின் சாதனைகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். கல்விக் குழுமத்தின் இணை செயலாளர் கே.வி. அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்   மு.பெ.கிரி, ஒன்றிய கழகச் செயலாளர் கள் அண்ணாமலை,  ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.