districts

img

ஓசூர் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் வார்டு உறுப்பினருக்கும் தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வியாழனன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் அண்ணா நகர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்.