சென்னை, அக். 7 - சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி திங்களன்று (அக்.7) கோட்டை நோக்கி குடும்பத்துடன் பேரணி நடத்தி னர். வாரியத்தில் 10 ஆயிரம் பேர் பணி யாற்றிய நிலையில், தற்போது 4 ஆயிரம் ஊழியர்களே உள்ளனர். 3 - 15 ஆண்டு கள் வரை நேரிடையாகவும், தினக் கூலிகளாகவும், பல்வேறு முறைகளில் அன்றாட கூலிகளாகவும் பணியாற்று கின்றனர். இவர்களுக்கு வருகைப் பதிவேடு கூட இல்லை. இதனால் பிஎப், இஎஸ்ஐ போன்ற குறைந்தபட்ச சட்ட உரிமைகளை கூட பெற முடியாமல் உள்ளனர். ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 17 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கடந்த மார்ச் மாதம் காஞ்சி புரம் தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவிட்டார். அதனை வாரியம் நிறை வேற்ற மறுக்கிறது. இது குறித்து முதல மைச்சர் தனிப்பிரிவு, துறை அமைச்சர், அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்க ப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 5 அன்று வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல சட்டம் கூறுகிறது. தினக்கூலிகள் மற்றும் ஒப்பந்தம் உட்பட முறைகளில் 10 ஆண்டுகள் வரை வேலை செய்துள்ள அனைவரையும் நிரந்தரம் செய்வோம் என்று சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சர் வாக்கு றுதி அளித்தார். இதற்கு மாறாக, தொழிலாளர் நல உதவி ஆணையரின் தீர்ப்பை எதிர்த்து வாரியம் மேல்முறையீடு செய்ய உள்ளது. இதனை கைவிட வேண்டும். 2 ஆயிரத்து 850 தொழிலாளர்களையும் அரசு நிரந்தரம் செய்ய வேண்டும். 654 தொழிலாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்கை விரைந்து முடித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புழல் 300 எம்எல்டி குடிநீர் சுத்திரிப்பு நிலையம், வீராணம் நீரேற்று நிலையம் ஆகிய வற்றை வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. அரசு மெத்தனம் காட்டினால் வேலை நிறுத்தம்? புதுப்பேட்டை சித்ரா திரையரங்கம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி தொடங்கி சிந்தாதரிப்பேட்டை அருகே நிறைவடைந்தது. இந்தப்போராட்டத் திற்கு தலைமை தாங்கி பேசிய சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், “அரசு மெத்தனமாக நடந்து கொண்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தீவிரமான போராட்டங்களுக்கு செல்வோம்” என்று எச்சரித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பழனி, துணைத் தலைவர் சி.சத்ய நாதன், பொருளாளர் இ.ராஜன், சிஐடியு மத்தியசென்னை மாவட்ட துணைச் செயலாளர் பி.சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், துறைச் செயலாளர் அலுவலகத்தில் தலைவர்கள் மனு அளித்தனர்.