districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் முயற்சி தலித் மக்களின் பொதுக்கழிப்பறைக்கு இணைப்பு

சென்னை, ஜூலை 18-

       தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தொடர் முயற்சியால் பொதுக்கழிப் பறைக்கு இணைப்பு வழங்கப் பட்டது.  

       சென்னை மாநகராட்சி திரு வொற்றியூர் மண்டலம் 1ஆவது வார்டில் உள்ளது தாழங்குப்பம் காலனி. இங்கு 200க்கும் மேற் பட்ட பட்டியல் இன மக்கள் வசிக் கிறார்கள். இந்த மக்களின் பயன் பாட்டிற்காக பொதுக்கழிப்பறை 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் இணைப்பு வழங்குவதில் அருகில் இருந்த நெட்டுக்குப்பத்தை சார்ந்த 4 குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கழிப்பறை பூட்டப்பட்டது.

    1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இணைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலி யுறுத்திய போது, சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக மாநகர அலுவலர் கூறியுள்ளார்.  தலித்துகளின் கழிவு  நீர் எங்கள் வாசல் பக்கம் வரக் கூடாது என அந்த 4 குடும்பங்களும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 200க்கும் மேற்பட்ட பட்டியல் இன குடும்பங்கள் கழிப் பறை இன்றி அவதிப்பட்டனர்.  

    இதுகுறித்து தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்ட தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் பகுதி நிர்வாகிகள் இதுகுறித்து முதல்வர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதையடுத்து ஆவடி காவல்  துணை ஆணையர் முயற்சியில் திங்களன்று (ஜூலை 17) திருவொற்றி யூர் மண்டல அலுவலகத்தில் சமரச  பேச்சுவர்த்தைக்கான கூட்டம் நடைபெற்றது. மண்டலத் தலை வர் தி.மு.தனியரசு தலைமை தாங்கினார். காவல் உதவி ஆணை யர் பிரேமானந்தம், காவல் ஆய்வாளர் சுதாகர் மாநகராட்சி செயற்பொறியாளர்  தணிகைவேல், உதவி செயற்பொறியாளர் ஜெயக் குமார், மெட்ரோ அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் நிர்வாகிகள், மற்றும் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ராஜ்குமார், துணைத்தலைவர்கள் பாக்கியம், ஆனந்தன், செம்மல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக தீண்டாமைக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

     பின்னர் மண்டலத்தலைவர் பேசுகையில் கழிப்பறை இணைப்பு கொடுப்பதால் உங்க ளுக்கு எந்த பிரச்சனையும் வராது.  உங்களுக்கு எந்த குறை இருந்தா லும் சொல்லுங்கள் செய்து கொடுக் கிறேன். இது 250 குடும்பங்கள் பயன் பாட்டுக்காக கட்டப்பட்டது. மாற்று வழி எதுவும் இல்லை. எனவே நீங்கள்  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு பெண்கள் கடுமை யாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நெட்டுகுப்பம் தலைவர் குண சேகர் பேசுகையில், நாங்கள் கால காலமாக அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம். இந்த கழிப்பறை  நீண்ட காலமாக இருந்தது. தற்போது  முழுமையாக இடித்து கட்டப் பட்டது. அப்போது குழாய் போகும்  இடத்தில் வீடுகள் இல்லை. இப் போது வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிப்பறை கண்டிப்பாக பயன் பாட்டிற்கு வர வேண்டும். எனவே ஏற்கெனவே இருந்த வழியில்  குழாய் பதிக்க நாங்கள் ஒத்து ழைப்பு கொடுக்கிறோம் என்றார்.

    1ஆவது மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் பேசுகையில், கழிவு நீர் நெட்டுகுப்பம் வழியாக மீண்டும்  தாழங்குப்பம் வந்துதான் இணைக் கப்படுகிறது. எனவே எங்கள் ஊர், உங்கள் ஊர் என எல்லை போடக் கூடாது. தீண்டாமையை கடைபிடித்தால் பிசிஆர் வழக்கு வரும். எனவே அப்பகுதியில் இணைப்பு கொடுக்க தடை சொல்லா தீர்கள். உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனை வந்தாலும் நான் சரி படுத்தி கொடுக்கிறேன் என்றார். இறுதியில் மண்டலத்தலைவர் செவ்வாயன்று (ஜூலை 18)  இணைப்பு குழாய் அமைக்கப்படும், எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.  

    அதனடிப்படையில் செவ்வா யன்று காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அலுவலர்கள் குழாய் பதித்து இணைப்பு கொடுத்தனர். நீண்ட காலமாக இணைப்பு கொடுக்காமல் பூட்டிக்கிடந்த பொதுக் கழிப்பறைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்த மண்டலத் தலைவர், ஆவடி காவல் இணை ஆணையர், காவல் ஆய்வாளர், மாநகராட்சி அலுவலர்கள், 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் சிவக்குமார், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு தாழங் குப்பம் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

;