districts

img

யுனைட் சங்கம் சிஐடியுவில் இணைப்பு

சென்னை,மே 9- தகவல் தொழில்நுட்பம் மற்றம் அது சார்ந்த சேவை தொழில்களில் பணி புரியும் ஊழியர்களுக்கான யுனைட் சங்கம் முறைப்படி சிஐடியுவில் இணைக்கப்பட் டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் பல்வேறு பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் சட்ட விரோத ஆட்குறைப்புகளை அமல்ப டுத்திய பின்னணியில் இந்த சங்கம் துவங்கப்ப ட்டது.  கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின் பெருமளவு இணைய வழியில்  செயல் பட்டு கொண்டிருந்த சூழலில், மே 8 ஆம் தேதி அன்று சங்கத்தின் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் நேரடியாக நடைபெற்றது. இதில் யூனியன் ஆப் ஐடி மற்றும் ஐடிஇஎஸ் எம்ப்ளாயீஸ் (யுனைட்) சங்கத்தை சிஐடியு- வுடன் இணைக்கும் தீர்மானத்திற்கு இந்த கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.  பெரும் நிறுவனங்களுக்குள் சங்கம் அமைப்பது, தகவல் தொழில்நுட்ப பூங்கா  அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதி களில் குழுக்கள் அமைப்பது, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது, மாநில, தேசிய சங்கங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, மற்றும் பணியிடத்தில் சமத்துவமும், ஜனநாய கத்துவமும் நிலைநாட்ட பாடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகளை அமல்படுத்த, தலைவ ராக பரணீதரன், பொதுச் செயலாளராக வெல்கின், பொருளாளராக இளங்கோ, துணைத் தலைவர்களாக, சுகுமார், கே.சி. கோபிக்குமார், அருண் குமார், துணைச் செயலாளர்களாக, திவ்யா, ராஜ் பிரபு ஆகி யோரை  உள்ளடக்கிய 21 பேர்  கொண்ட  செயற்குழு தேர்வுசெய்யப்பட்டது.

பாராட்டு
கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஐடி துறை எழுத்தாளர்களான ஹரிஷ், சிந்துஜா ஆகியோர் எழுதிய “குரலற்றவர்கள்” மற்றும் “பெண்களின் ஆடை: வரலாறும் அரசி யலும்” புத்தகங்களுக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். சங்கம் அமைப்பதற்காக இரு முறை பழிவாங்கப் பட்டு அதை முறியடித்து தொடர்ந்து தொழிற் சங்கப்பணியில் ஈடுபட்டுள்ள பிரபுதாஸ் பாரா ட்டப்பட்டார். தனியார் மய நடவடிக்கைகளை எதிர்த் ்தும், தொழிற்சங்க சட்டங்களை தொகுப்பு என்ற பெயரில் சுருக்கியதை கண்டித்தும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் விசாகா பரிந்துரைகளை ஐடி நிறுவனங்களில் அமல்படுத்தக்கோரியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சிஐடியு மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநில செய லாளர் கே.சி.கோபிக்குமார் மற்றும் சுகுமார் உள்பட பலர் பேசினர்.