பொன்னேரி,ஜூலை14-
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் காவல் நிலை யத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் பாலம் கீழ் சாலை ஓரத்தில் ஊர் பெயர் தெரியாத ஆண் பிரேதம் கண்டெடுக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப் பட்டுள்ளது. மேற்படி பெயர் அவரை பற்றி தெரிந்தால் இ-5 சோழவரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். குற்ற எண்.466/2023 பிரிவு 174 சி.ஆர்.பிசி ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது.