districts

img

விழுப்புரம் அருகே மஞ்சள் அறுவடை தீவிரம்

விழுப்புரம், ஜன.12- பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தமிழகம் முழுகவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பானையில் கட்டப்படும் பொங்கல் மஞ்சள் விழுப்புரம் அருகே கொடுகூர், சித்தலம்பட்டு, திருவக்கரை, திருக்கனூர், கூனிச்சம்பட்டு உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஆண்டுதோறும் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் வருவதையொட்டி சனிக்கிழமை முதல் விவசாயிகள் மஞ்சள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் கோரிக்கை  பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு பொங்கல் பரிசு அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கி வருகிறது. அதே போன்று மஞ்சள் பயிரிடும் விவ சாயிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.  இதற்கு காரணம், விலை மற்றும் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால் மஞ்சள் விவ சாயம் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இதனை கருத்தில் கொண்டு அரசு வரும் காலங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன், மஞ்சள் பயிரிடும் விவசாயிகளிடம் மஞ்சளை அரசே கொள்முதல் செய்து மஞ்சள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.