districts

img

வள்ளலார் பாதையோடு பயணக்கிறது செங்கொடியின் பொதுவுடை தத்துவம் சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் உ. வாசுகி பேச்சு

சிதம்பரம், ஜூலை 11-

      வள்ளலார் விட்டுச் சென்ற சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறைகளைப் பொதுவுடமை தத்துவத்தோடு இணைத்துத் அவரது பாதையில் சென்று கொண்டிருக்கும்  இயக்கம் செங்கொடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

    சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வள்ள லார் 200’ சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து உரையாற்றினார்.  

   அப்போது, “சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் பரப்புரை செய்தவர் வள்ளலார். இவரைச் சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் ரவி கூறியிருப்பது கண்டிக்க தக்கது” என்றார்.

    தற்போது நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பது சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் கும்பலாகும். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம் இதுதான் உண்மையான வாழ்க்கை நெறியென குரல் கொடுத்தார் வள்ளலார். ஆனால், பாஜகவின் கருத்துக்கள் அனைத்தும் வள்ள லாருக்கு எதிரானது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் அவர் தெரி வித்தார்.

    சாதி,சமயம் மூடநம்பிக்கை, மதங்களை கடுமையாக விமர்சித்த வர் வள்ளலார். ஆனால், ஒன்றியத்தி லுள்ள மோடி அரசோ இவைகளை மூலதனமாகக் கொண்டு செயல்படு கிறது என்றும் வாசுகி குற்றம் சாட்டி னார்.

    வள்ளலார் வகுத்துள்ள கொள்கைகள், பாதைகளை, தத்துவத்திற்கு ஏற்பத்தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வள்ளலார் சொல்லுகிற மதவெறி அரசியலை நிராகரிப்பதிலும்  முன் வரிசை யில் நிற்பது மார்க்சிஸ்ட் கட்சி.  சனா தனத்தை எதிர்ப்பதிலும் வலுவாக உள்ளது.  

    வள்ளலார் சொல்லுகிற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அன்பு செலுத்தப்பட வேண்டும், அனைத்து மக்களும் எந்தச் சாதி, மதமாக இருந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கொள்கை போராட்டக்  களத்தில் முன்னிலையில் நிற்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் கூறினார்.

   பெண்களும், குழந்தைகளும் வன் முறைகளால் பாதிக்கப்படும்போது முதலில் களத்தில் இறங்குவது  மார்க்சிஸ்ட் கட்சி தான். அதனால்தான் வள்ளலார் விட்டுச் சென்ற இப்படிப் பட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறை களைப் பொதுவுடமை தத்துவத்தோடு இணைத்துத் அவரது பாதையில் சென்று கொண்டிருக்கும்  இயக்கம் செங்கொடி என்றும் வாசுகி தெரி வித்தார்.

   இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மூத்தத் தலைவர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் தேன்மொழி ஆகியோர் உரை யாற்றினர்.

    மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக் குமரன் நன்றி கூறினார்.

;