திருவள்ளுவர் அடுத்த கனகவல்லிபுரம் பகுதியில் செயல்படும் காவலர் பயிற்சி பள்ளியில் 432 பெண் காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா நடந்தது. விழாவுக்கு காவல்துறை தலைவர் (பொது) ராதிகா கலந்து கொண்டு பயிற்சியின்போது கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பெண் காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.