நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் மற்றும் அக்ரஹாரம் பகுதி விசைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும். இங்கு பணிபுரியும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்புமின்றி கொத்தடிமை போல் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விடியலுக்காக ஓயாது உழைத்து வந்தவர் அக்ரஹாரம் பகுதியின் சிபிஎம் கிளை செயலாளர் சி.வேலுச்சாமி. 2010ஆம் வருடம் அப்பகுதியில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு விசைத்தறி தொழி லாளியின் குடும்பம் போதிய வருமானமின்றி தமது குடும்பத் தேவைக்கு கந்து வட்டி தொழில் செய்யும் சிவக்குமார் என்பவரிடம் கடன் வாங்கியது. வட்டியை உரிய காலத்தில் கட்டமுடியாமல் திண்டா டிய அவர்களின் வறுமையை பயன்படுத்திய கந்து வட்டி கும்பல். அந்த குடும்பத்தின் இளம் பெண்ணை கட்டாய பாலியல் வல்லுறவு செய்து அதனை வீடியோ எடுத்து அச்சுறுத்தி வந்தது. அந்த வீடியோவை இணையத்திலும் வெளியிட்டு அட்டூழியம் செய்தது. இதனால் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். விசைத்தறியா ளர்களின் உரிமைக்காகப் போராடி வந்த வேலுசாமியை அணுகி இந்த கொடூரத்தை விவரித்தனர். இதை யடுத்து தோழர் வேலுச்சாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பள்ளிப்பாளையம் காவல் நிலை யத்திற்கு சென்று கயவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்தார். இதையடுத்தே இந்த கந்து வட்டி கும்பலின் அட்டூழி யங்கள் ஊடகங்களிலும் வெளியா னது. இதனால் கந்து வட்டி சிவக்குமார் காவல்துறையினால் கைது செய்யப் பட்டார்.
இதனால் ஆத்திரமுற்ற கந்து வட்டி கும்பல் தோழர் வேலுச் சாமிக்கு கொலைமிரட்டல் விடுத் தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை யும் அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் தோழர் வேலுச்சாமி மிரட்டலுக்கு அஞ்சாமல், அந்த குடும்பத்தை பாதுகாப்பதில் முன்நின்றார். மீண்டும் காவல்நிலையத்தில் அந்த குடும்பத்திற்கும், தனக்கும் மிரட்டல் வருவதை தெரிவித்து பாதுகாப்பு கோரினார். ஆனால் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. உரிய நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் 2010 மார்ச் 3 அன்று தோழர் வேலுச்சாமி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சிவக்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட கந்து வட்டி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வேலுச்சாமியை வெட்டிப் படுகொலை செய்தது. இந்த படுகொலையைக் கண்டித் தும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு அமைப்புகளும் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்தின. படுகொலை செய்யப்பட்ட தோழர் வேலுச்சாமிக்கு மனைவி மற்றும் தாரணி, லீலாவதி மற்றும் ஸ்டாலின் என்ற மூன்று குழந்தைகள் உள்ள னர். அவர்களை பாதுகாக்கும் பொருட்டு நிவாரண நிதி வசூல் செய்து தியாகி வேலுச்சாமியின் குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. இன்றளவும் அவரது குடும்பத்தை சிஐடியுவும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாது காத்து வருகிறது. வழக்கை உள்ளூர் காவல் துறை நடத்தினால் நீதி கிடைக்காது, சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். அரசு வழக்கறிஞராக ஈரோடு வழக்கறிஞர் பி.திருமலை ராஜனை நியமிக்க வேண்டும் என்ற போராட்டம் கைகொடுத்தது.
விசாரணை 12 ஆண்டுகளாக இழுத்த டிக்கப்பட்டு சாட்சிகள் விலை பேசப்பட்டனர். எனினும் வழக்கறி ஞரின் கடுமையான உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், சாட்சிகளின் ஒத்துழைப்போடும் எதிரிகள் அனைவரும் குற்றவா ளிகள் என்று 2022 மார்ச் 14 ஆன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பாலியல் வல்லுறவு வழக்கில் முக்கிய குற்றவாளி சிவகுமாருக்கு 2021ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது. அதிகார பலம், பண பலத்தை மீறி நீதி நிலைநாட்டப்பட்டது. அதற்கு பின்னணியில் செங்கொடியின் நீண்ட போராட்டமும் உள்ளடங்கும். குரலற்றவர்களுக்கு குரல் கொடுக் கும் நபர்களுக்கு நம்பிக்கைய ளிக்கும் தீர்ப்புகளில் ஒன்றாய் பள்ளிப்பாளையம் வேலுச்சாமி வழக்கின் தீர்ப்பு இன்று நம் முன் இருக்கிறது. தோழர் வேலுச்சாமி யின் தியாகம் விசைத்தறித் தொழி லாளர்களின் வாழ்வை பாதுகாக்கும் தியாகச் சுடராக இன்று நம்முன் ஒளிர்கிறது. அவரின் நினைவோடு தொழிலாளர்களின் உரிமைகளை யும், வாழ்வாதாரத்தையும் பாது காக்கும் போராட்டத்தை முன்னெ டுப்போம்.