districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி… சிதம்பரம் நூலகத்திற்கு மேல் தளம் கட்ட அனுமதி

சிதம்பரம், மே 14-  சிதம்பரம்  கச்சேரி தெருவில்  இயங்கி வரும்  நூல கத்தில்  போதுமான இட வசதி இல்லாததால் புத்தகங்கள்  கட்டு கட்டாக  நூலக கட்டிடத்திற்கு  உள்ளே லாப்ட்  மற்றும் தகரக் கொட்டகையில்  அடுக்கி வைக்கப்பட்டுள் ளது. மேலும் அரசு  தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவி கள்,  நூலக வாசகர்கள் உள்ளிட்டவர்கள் இடவசதி இல்லாமல்  நூலகத்தில்  புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள ரேக்குகளுக்கு இடையே அமர்ந்து  புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இது குறித்த  செய்தி  செவ்வாயன்று (மே 14) தீக்கதிர்  நாளிதழில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது.  இதனை அறிந்த  நூலகத்துறை இயக்குநர்   இளம்பகவத்  மற்றும்   இணை இயக்குநர் இளங்கோ  ஆகியோர்  சிதம்பரத்தில்  உள்ள நூலகர்களிடம்  சிதம்பரம்  நூலகத்தில்  உள்ள  நிலமையை வீடியோ கால் மூலம்  காண்பிக்க  கூறியுள்ள னர்.  நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தையும்  அங்கு மாணவ- மாணவிகள்  இடநெருக்கடியில் அமர்ந்து படிப்பதையும்  வீடியோ கால் மூலம்  பார்த்து அதிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நூலகத்திற்கு  முதல் தளம் அமைக்க அனுமதி வழங்கி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும்  விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளது என  தெரிவித்துள்ளார்கள். மேலும் இரண்டாம் தளம் அமைப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளப்படும் என  தெரிவித்துள்ளனர். இதனை யறிந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் மாணவ  மாணவிகள் தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

;