districts

img

 சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு

 சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு ரயில் பணிமனையிலிருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரயில் என்ஜின் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயில் என்ஜின் தடம்புரண்டது.இதையடுத்து ஊழியர்கள் ரயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.