districts

img

சாதி சான்றுக்காக 2 வருடமாக போராடும் பழங்குடி மாணவர்

சிதம்பரம், மே 31- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது ஆயங்குடி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் சக்திவேல் - வேம்பு மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மை பணி செய்து வருகிறார்கள். இவர்களது  மகன் சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து, நடந்து  முடிந்த  12 ஆம் வகுப்பு தேர்வில் 479 மதிப்பெண்கள்  பெற்று  பள்ளியில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது உயர் கல்வி படிப்பதற்கு பழங்குடி சாதி சான்று தேவைப்படுகிறது. இந்த சான்றுக்காக விண்ணப்பம் செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல முறை அலைந்தும் இரண்டு ஆண்டுகளை கடந்தும் சாதி சான்று வழங்கவில்லை.  கல்லூரியில் சேர்வதற்கு ஜூன் 6ஆம் தேதி கடைசியாகும். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழியை சந்தித்து  சாதிச் சான்று பெற்று தர உதவி செய்யுமாறு மாண வரின் பெற்றோர் முறை யிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேன்மொழி, ராமச்சந்திரன், பிரகாஷ், ராஜா, ஆழ்வார் ஆகியோர் சாராட்சியர் ராஷ்மி ராணியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

;