districts

img

வீடுகளை இடித்த அதிகாரிகள்: பழங்குடியினர் வாழ்வை காத்த செங்கொடி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அதிய னூர் ஊராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக  3 தலைமுறைகளாக வீடுகட்டி வசித்து வந்த பழங்குடி இருளர் மற்றும் கல் உடைக்கும் தொழி லாளர்களின் வீடுகளை  நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திடீரென ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அதிய னூர் ஊராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் அதியங்குப்பம் கிரமத்தின் அருகே சில பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். ஊருக்கு அருகில் பழங்குடியின மக்கள் எப்படி குடியிருக்கலாம் ? என ஆதிக்க சக்தியினர் சிலர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கிருந்து வந்த பழங்குடியின இருளர் இன மக்கள். அதியங்குப்பம் – புன்னை சாலையில். பிள்ளையார் கோயில் அருகில் குடியேறினர். அந்த இடத்தில் பழங்குடியின குடும்பத்தினருக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. அதையும் பொறுக்கமுடியாத ஆதிக்க சக்திகள் அவர்களை அங்கிருந்தும் விரட்டினர். அதன்பிறகு அதியங்குப்பம் சிற்றூருக்கு அருகில்உள்ள குச்சிக்காடு  என்ற பகுயில் கடந்த 30 ஆண்டுகளாக அந்த மக்கள் வசித்து வருகின்றனர். அந்த இடத்தில் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ரேஷன் அட்டை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகாமையில் இருந்த போதிலும் அந்த இடம் நீரர்பிடிப்பு பகுதியாக இல்லாமல், நீர் பிடிப்பு பகுதிக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

அந்த பகுதியில் கடந்த 2005, 2010, மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பெய்த பெரு மழையின் போது, அங்கு தண்ணீர் தேங்கவில்லை.  தற்போது தமிழகம் முழுவதும் பெய்த கன மழையின் போது கூட, அந்த பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு, பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்த பகுதி, நீர்பிடிப்பு பகுதி இல்லை. என்பதை ஆய்வு செய்து வகைமாற்றம் செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முறையீடு செய்யப்பட்டடது. அந்த முறையீட்டை கண்டு கொள்ளாத தமிழ அரசும், மாவட்ட நிர்வாகமும், தற்போது நீதி மன்ற உத்தரவு என்றபெயரில், திடீரென, ஜேசிபி இயந்திரத்துடன் சென்று,  2 நாட்களாக இருளர்இன குடும்பத்தினரின் வீடுகளை இடிக்கப்போவதாக மிரட்டி வந்தனர். இந்த செயல், அங்கு வசித்துவந்த மக்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பழங்குடியின மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடியிருக்க இடம், வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களின் வழ்வை காப்பாற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் தலைமையில் திரண்டு வந்து வந்தவாசி  தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ப.செல்வன், சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல்காதர், நகர செயலாளர் ந.ராதாகிருஷ்ணன், கரும்பு சங்க மாநிலகுழு உறுப்பினர் பெ.அரிதாசு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தநிலையில், வரு வாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்து அங்குள்ள குடியிருப்புகளை இடிக்க முயன்றனர். அதை, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில்  தடுத்து நிறுத்தினர்.  பெண்கள், வயதான வர்கள், பள்ளி மாணவர்கள்  உள்ளிட்ட பலர் இந்த சம்பவத்தில் பாதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் ஒருவர் ஒரு பெரிய சாரை பாம்பை பிடித்து கழுத்தில் போட்டு வந்தார்.

போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாலுகா அலு வலக வளாகத்துக்குள் நுழைய விடாமல் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்தனர். அதை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றபோது காவல்துறை யினருக்கும்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. பின்னர் வட்டாட்சியர்  முருகானந்தம், வந்தவாசி, செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா, செந்தில் ஆகியோர் வந்து, போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,குச்சிக்காடு பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ப்பட்டு வருகிறது.  இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும்  என எழுத்துப்பூர்வமாக உறுதி யளிக்கப்பட்டது.  இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.  ஜெ.எஸ்.கண்ணன்

;