districts

img

கேலோ இந்தியா: தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்

சென்னை,ஜன.22- கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டு போட்டியில் மூன்றாவது நாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, 1 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  சைக்கிள் பந்தயத்தில் திங்களன்று (ஜன.22) தமிழ்நாடு அணி இரண்டு தங்கத்தை யும் மூன்று வெண்கலத்தையும் வென்றது. கபடி மற்றும் யோகா பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கமும் ெவன்றனர். ஏற்கனவே  யோகா மற்றும் வாள் வீச்சு பிரிவுகளில் தமிழ்நாடு வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஆடவருக்கான கபடி போட்டி அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு - ராஜஸ்தான்  அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 23-41 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. அதேபோல் ஆடவருக் கான ஹாக்கியில் ஒடிசா அணி 6-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. மதுரையில் நடைபெற்று வரும் கட்கா போட்டியில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் தமிழ்நாடு அணி 108-79 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. மகளிர் பிரிவு கபடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி மேலும் ஒரு பதக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை (ஜன.23) தடகளம், ஜூடோ, பளுதூக்குதல், ஸ்குவாஷ், சைக்கிள், துப்பாக்கி சுடுதல், யோகா போட்டி கள் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு வீரர்கள் சொந்த மண்ணில் மேலும் பதக்கங் களை குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பதக்கப் பட்டியல் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை 6 தங்கம், இரண்டு வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது. இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய மகாராஷ்டிரா 4 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என 23 பதக்கங்கள்  குவித்துள்ளது. 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் வென்ற ஹரியான மூன்றாவது இடத்திலும், டெல்லி அணி 4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் என 8 பதக்கம் வென்றிருக்கும் மணிப்பூர் 6 வது இடத்தில் உள்ளது. கேரளா ஒரு தங்கம் வென்று பதக்கப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்ற மேற்கு வங்கம் 7ஆவது இடத்தில் உள்ளது.