தாம்பரம் மாநகராட்சி, 34வது வார்டு சிட்லபாக்கம் பெரியார் தெரு சாலையை கால்வாயுடன் அமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிட்லபாக்கம் கிளைச் செயலாளர் தமிம்பாஷா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை தாம்பரம் தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தொடங்கி வைத்தார்.