விழுப்புரம், ஏப்.25- விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினர் ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வை யிட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதா னத்தில், வட்டார போக்கு வரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மூலம், 129 தனியார் பள்ளிக ளின் 523 பள்ளி வாகனங்க ளின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை துவக்கி வைத்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், திண்டி வனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.