districts

img

ஜான் பிரிட்டாஸ் எம்.பி.,க்கு சம்மன் அனுப்புவதா

                 தேசிய ஊடகங்கள் 
                   கடும் விமர்சனம்
              மூன்று நாளிதழ்களில் தலையங்கம்

புதுதில்லி, மே 4-

    கேரளாவை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை விமர்சித்து கட்டுரை எழுதியதற்காக சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸிடம் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் சம்மன் அனுப்பி, விளக்கம் கேட்டுள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப்  பறிக்கும் ஒரு புதிய நடவடிக்கை என்று மூன்று  நாளிதழ்கள் புதனன்று எழுதிய தலை யங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.  

   எம்.பி.,க்களின் நிலையே இப்படி என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என,  நாளிதழ்கள் கேள்வி எழுப்புகின்றன.

அமித்ஷாவிடம் விசாரியுங்கள்

   ‘கருத்துச் சுதந்திரத்தை தடுக்கும் மூர்க்கத்  தனமான முயற்சி’ என்ற தலைப்பில் தலை யங்கம் எழுதியுள்ளது டெக்கான் கிரானிக்கல் நாளிதழ். விசாரணைக்கு பிரிட்டாஸ் அல்ல, அமித் ஷா அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதன் தலையங்கம் கூறுகிறது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அமித் ஷாவின் அறிக்கையை விமர்சிக்க பிரிட்டாஸுக்கு முழு  உரிமை உண்டு. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அரசியல்  சாசனப் பதவியை வகிக்கும் தன்கர், பிரிட்டாஸி டம் விளக்கம் கேட்டது ஆச்சரியமாக உள்ளது.  சபைக்கு வெளியே ஒரு உறுப்பினரின்  நடத்தைக்கு, நடவடிக்கை எடுக்கவும், விளக்  கம் கேட்கவும், மாநிலங்களவை தலைவ ருக்கு, என்ன அதிகாரம் உள்ளது என்பது தெரியவில்லை.

  இந்த விசயத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பிரிட்டாஸின் விமர்சனம் சட்டத்  திற்குப் புறம்பானது என்பதை விட அமித்ஷா வின் அறிக்கையின் பொருத்தமற்ற தன்மையே தெரிகிறது. அமித் ஷாவின் வார்த்தைகள் அவ ரைப் பின்பற்றுபவர்களின் ஆரவாரத்துக்காகச் சொல்லப்பட்டவை. எம்.பி.யின் கட்டுரையை யாரோ ஒருவர் தேசத்துரோகமாக பார்த்தது  அதிர்ச்சி அளிக்கிறது. அதை ஏற்று மாநிலங்க ளவைத் தலைவர் நடவடிக்கை எடுத்ததும் ஆச்ச ரியமாக உள்ளது. பல தவறான பழக்கவழக் கங்கள் உருவாக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் இதுவும் ஒரு தவறான மாதிரியா கும்.

  பேச்சு சுதந்திரத்தைப் பறிக்க புதிய வழி களை ஒன்றிய ஆட்சியாளர்கள் கண்டுபிடிப்ப தற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. மக்களவை உறுப்பினர்களின் உரிமைகளைப்  பாதுகாக்கும் பொறுப்பு அந்த அவையின் தலைவரான சபாநாயகருக்கு உள்ளது. பிரிட்டாஸின் கட்டுரை பற்றிய கேள்விகளை எழுப்பி, அவரிடம் விளக்கம் கேட்டதன் மூலம்,  அந்த உரிமைகள் குறித்த குறுகிய மற்றும்  மட்டுப்படுத்தப்பட்ட பார்வைதான் ஜகதீப் தன்  கருக்கு இருந்தது என்பது தெளிவாகியது.

  அரசாங்கத்தையும் அதன் நடவடிக்கை கள் மற்றும் கொள்கைகளையும் சபைக்குள் விமர்சிக்க முடியாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்துள்ளனர். இப் போது அவர்கள் வெளிப்படுத்தும் நிலைப்பாடு களுக்காக அவர்கள் கேள்விக்குள்ளாக்கப்படு கிறார்கள். எம்.பி.க்களே தங்கள் பேச்சு சுதந்தி ரத்தை சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்த முடியாவிட்டால், சாதாரண குடி மகன் அதைச் செய்து விட முடியுமா?” என்று அத்தலையங்கம் கேள்வி எழுப்புகிறது.

மாறுபட்ட கருத்து,  தேசத் துரோகமா?

    அவர் அவையின் உறுப்பினராக இல்லா விட்டாலும், ஒவ்வொரு குடிமகனும் செய்வது போல, பிரிட்டாஸுக்கு அரசாங்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகப் பேசவும் எழுதவும் உரிமை உண்டு என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது தலையங்கத்தில் தெரி வித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளில் கருத்து வேறுபாடு வார்த்தைகள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அது தேசத்துரோக பேச்சு அல்ல என, 1962இல் கூட, ‘கேதார் நாத்  (எதிர்) இந்திய ஒன்றியம்’ வழக்கில், உச்ச  நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கருத்துக் களையும் விவாதங்களையும் சாத்தியமாக்கி மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்க வேண்  டும், என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

  “இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் நடக்கின்றன. மக்களவை சபாநாயகரோ அல்லது மாநிலங்களவைத் தலைவரோ ஒரு  நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு பத்திரிகை யில் ஏன் கட்டுரை எழுதினார் என்பதை இதற்கு  முன் கேட்டதில்லை. குடியரசு துணைத் தலை வர் ஜகதீப் தன்கர், மாநிலங்களவையின் தலை வர் என்ற முறையில், சிபிஎம் உறுப்பினர் ஜான்  பிரிட்டாஸிடம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியதற்கான சூழ்நிலையை விளக்குமாறு கேட்டுக் கொண்டதாக ஃப்ரீ  பிரஸ் ஜர்னல் எழுதுகிறது. எந்த அதிகாரத்தின் கீழ் தலைவர் இந்த விவகாரத்தில் தலை யிட்டார் என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள் ளது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வாக்களிக்கப்பட்ட பிரிட்டாஸ், உள்  துறை அமைச்சருக்கு எதிராக ஏதாவது அவ தூறு எழுதியிருந்தால் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமித் ஷாவுக்கு அதி காரம் உள்ளது. இழப்பீடும் கோரலாம்.

   ஆனால், பேச்சு சுதந்திரம் என்பது குடி மகனின் மறுக்க முடியாத உரிமைகளில் ஒன்றா கும். இந்த உரிமை மக்களுக்கு மறுக்கப் பட்டால், ஜனநாயகம் அதன் பொலிவை இழந்துவிடும். ஒரு கட்டுரையை ஏன் எழுதி னீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்பது தவறான செய்தியை மக்க ளுக்கு அனுப்புகிறது. விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வற்புறுத்தலையும் மிரட்டலையும் பயன் படுத்துவதால், விமர்சனங்களுக்கும் கருத்து  வேறுபாடுகளுக்கும் இடம் சுருங்கி வருகிறது.  ஜான் பிரிட்டாஸ் இன்று ஏன் ஒரு கட்டுரை யை எழுதினார் என்பதை விளக்க வேண்டுமா னால், அதே அதிகாரத்தை பத்திரிகையா ளர்கள் மற்றும் பிறருக்கு எதிராக ஆட்சியா ளர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’’ எனவும் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் கேள்வி எழுப்பியுள்ளது.

   கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா, “கேரளா உங்களுக்கு அருகில் இருக்கிறது. நான் அதிகம் கூற வேண்டியதில்லை” என் கிற வகையில் கேரளாவை விமர்சித்து உரையாற்றினார். இதை தனது கட்டுரையில் விமர்சித்ததற்காகத்தான் பிரிட்டாஸிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.