சென்னை,மார்ச் 17- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் வெள்ளியன்று அதிகாலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி யான சூழல் நிலவியது. காலை 10 மணிக்கு பின்னர் வானில் கருமேகங்கள் திடீரென திரண்டு கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, திருவொற்றி யூர், ராயபுரம், பெரம்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சில இடங்க ளில் மழை இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது:- வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு திசை காற்றும் மேற்குதிசை காற்றும் சந்திக்கிறது. இதனால் தமிழகம், புதுச் சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். சென்னை யில் 2 நாட்களுக்கு இடி- மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.