districts

img

வடசென்னையில் மாணவிகளுக்கான அரசு கலைக் கல்லூரி தொடங்குக மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, செப். 20- வடசென்னையில் மாணவிகளுக்கான அரசு கலைக் கல்லூரியை தொடங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் வடசென்னை மாவட்ட மாநாடு  பெரம்பூர்  வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில் மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலை மையில் ஞாயிறன்று (செப்19) நடை பெற்றது. மாவட்ட துணை தலைவர் பிரகாஷ் சங்க  கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் எம்.நிதிஷ்குமார் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் அகல்யா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ‘மாணவர் நலனில் இந்திய  மாணவர்  சங்கம்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலா ளர் இசக்கி நாகராஜ்,  ‘பொதுமுடக்க காலத்  தில் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மீ.காவியா ஆகியோர் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.பி.சர வணதமிழன், மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் ஆகியோர் பேசி னர். மாவட்டக் குழு உறுப்பினர் விஜய பாரதி நன்றி கூறினார். 25 பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலைவராக காவியா, செயலாளராக நிதிஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்: ஒன்றிய அரசு  நீட் தேர்வுக்கு தமிழ கத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், நீட்  தேர்வு அச்சத்தால் நடைபெறும் தற்கொலை களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் கலை- அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க கூடிய கட்டணக் கொள்ளையை தடுத்திட கட்டண நிர்ணய  குழுவை நியமிக்க வேண்டும், பள்ளிக்  கூடத்தில் இயங்கி வரக்கூடிய திருவொற்றி யூர் அரசு உறுப்பு கல்லூரிக்கு சொந்த கட்டி டம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ராயபுரம் மின்ட் ஐடிஐயில்  பாது காக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை  வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், வடசென்னையில்  மாணவிகளுக்கான அரசு கலைக் கல்லூரியை தொடங்க வேண்  டும், மாநகராட்சி பள்ளிகளில் குடிநீர், கழி வறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும், பள்ளி மாணவர்களி டையே பரவி வரக்கூடிய போதை கலாச் சாரத்தை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;