திருவண்ணாமலை,டிச.8- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ம.சரவணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. சுப்பிரமணி, டி.கே.வெங்க டேசன், பல.கிருஷ்ணமூர்த்தி, இரா.சிவாஜி, ப.செல்வன், அ.உதயகுமார், கி.பால முருகன், இரா.இரவிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் தோட்டப் பயிருக்கு ரூ. 40 ஆயிரம் நட்டஈடு வழங்க வேண்டும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் இடிந்துபோன கிணறு களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தடையின்றி, லஞ்சம் இன்றி, அனைவருக்கும் பயிர்க கடன் வழங்க வேண்டும், மழை வெள்ளத்தாலும், கோமாரி நோயாலும் இறந்து போன கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.