districts

img

நிலம், வீட்டுமனைப் பட்டா சுடுகாட்டு பாதை கோரி போராட்டம்

ஓசூர், டிச.20- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோக்காடி இட்டிக்கல் அகரம், ஆலப்பட்டி கிராம மக்களுக்கு நிலம்,வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முறையீடு போராட்டம் நடைபெற்றது. சோக்காடி கிராமத்தில் உள்ள பட்டிய லினத்தை சேர்ந்த 80 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா,60 ஆண்டு களுக்கு மேலாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சிதிலமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். ஆலப்பட்டிக்கு கழிவு நீர் கால்வாய், சுடுகாட்டு பாதை அமைத்து தரவேண்டும் 45 ஆண்டுகளுக்கு முன்பு இட்டிக்கல் அகரம், அண்ணா நகர், அகரம் பட்டிய லின மக்களுக்கு  வழங்கப்பட்ட நிலத்திற்கு உடனடியாக பட்டா கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், லெனின் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா விளக்கிப் பேசினர். போராட்டத்தின் முடிவில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.