விழுப்புரத்தில் வரும் ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் சிபிஎம் மாநில மாநாடு நடைபெறஉள்ளதையொட்டி சேலம் மாங்குயில் கலைக்குழு பிரச்சாரம் நடைபெற்றது. திண்டிவனத்தில் காந்தி சிலை,செஞ்சி பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சார நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.