districts

img

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு, ஜூலை 8-

     எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின்  பட்ட மளிப்பு விழாவில்  மாணவ, மாணவியருக்கு பட்டங்களை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்.

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் செயல்பட்டுவரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறு வனத்தின் 19 வது பட்டமளிப்பு விழா சனியன்று (ஜூலை 8) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை வேந்தர்கள் ரவி பச்சமுத்து,  பி. சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறு வனத்தின் துணைவேந்தர்  சி. முத்தமிழ்ச் செல்வன் வரவேற்று நிறுவனத்தின் ஆண்ட றிக்கையை வாசித்தார்.

   பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவன வேந்தரும்,பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.

    மத்திய ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  பங்கேற்று 143 மாணவர்களுக்கு பி.எச்டி பட்டங்கள் உட்பட 7683 பேருக்கு பட்டங் களை வழங்கியும்,தேர்வில் சிறப்பிடம் பெற்ற 103 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

   நிகழ்ச்சியில் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பதிவாளர்  சு.பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் இணை துணை வேந்தர் லெப்டினெண்ட் கர்னல் ஏ. ரவிக் குமார், தேர்வு கட்டுப்பாட்டாளர்  கே. குண சேகரன், முதல்வர்கள்  டாக்டர் ஏ. சுந்தரம், முனைவர் டி. வி. கோபால் உள்ளிட்ட வர்கள் பங்கேற்றனர்.

;