districts

img

தண்டையார்பேட்டை பேருந்து முனையத்திற்கு சிங்காரவேலர் பெயர்

சென்னை, அக். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆர்.கே. நகர் பகுதி 16ஆவது மாநாடு தண்டையார்பேட்டையில் தோழர்கள் ஜெ.மோகனசுந்தரி, சி.ராஜேந்திரன் நினைவரங்கில் ஆர்.லோகநாதன் தலைமையில் ஞாயிறன்று (அக். 6) நடை பெற்றது. மூத்த உறுப்பினர் சி.சேகர் கட்சிக் கொடியை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பா.விமலா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் எம்.ஷாஜகான் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எல்.பி.சரவணதமிழன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக நா.திருமுருகன் வரவேற்றார். கே.குணசேகர் நன்றி கூறினார். தீர்மானங்கள் தண்டையார்பேட்டை பேருந்து முனையத்திற்கு தோழர் சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் உள்ள குழாய்களை மாற்ற வேண்டும், குடியிருப்பு மனைகளுக்கு கிரையப் பத்திரம், பட்டா தடையில்லாச் சான்று வழங்க வேண்டும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்ற வேண்டும், தண்டையார்பேட்டை ஐஓசியில் இருந்து பேருந்து சேவையை அதிகப்படுத்த வேண்டும், மாதா மாதம் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிக்குழு தேர்வு 9 பேர் கொண்ட ஆர்.கே.நகர் பகுதி குழுவின் செயலாளராக வெ.ரவிக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.