விழுப்புரம், பிப். 19- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அன்புஜோதி ஆசி ரமத்தில் அரசுத்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்த னர். அப்போது அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் சித்ரவதைக்கு ஆளாக்கியதும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், அங்கிருந்த பலர் மாய மாகி இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிர மத்திலிருந்த 143 பேரை மீட்டு முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து, தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் விசாரணை நடத்தினார். பின்னர் அன்புஜோதி ஆசிரமத்தை ஆய்வு செய்தார். மேலும் செஞ்சி மற்றும் மேல்மலை யனூர் அருகிலுள்ள துறிஞ்சிப்பூண்டி ஆகிய இடங்களிலுள்ள மனநல காப்ப கங்களுக்கு சென்று பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த காஞ்சன் கட்டார்,“முதல்கட்ட விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் இருவரிடம் பாலியல் அத்து மீறல் நடந்தது தெரிய வருகிறது. ஆசிரம அலுவலக அறைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளையும் ஆய்வு செய்தோம். அவைகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டது. விசாரணை முழுமை அடைந்த பிறகு விரைவில் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம்”என்றார்.