திருப்போரூர், ஜூலை 4-
திருப்போரூர் அருகே பனங்காட்டுப் பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்தார். இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர்.
அந்த புகாரில் உண்மை தன்மை இருப்பது உறுதியானது. இதை யடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரனீத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவுப் படி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காப்பகத்தில் மேலும் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் காப்பகத்தில் தங்கியுள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதி யானது. இதைத்தொடர்ந்து வீரமணியை போலீசார் செவ்வாயன்று காலை கைது செய்தனர். இந்த காப்பகத்தில் இருந்தவர் களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காப்பகத்தை காவல்கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.