districts

img

சிதம்பரம்: குடிநீரில் சாக்கடை கலப்பு

சிதம்பரம், ஜன.19- சிதம்பரம் நகரத்தின் 5-வது வார்டு லப்பை தெரு வில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக அப்பகுதி யில் உள்ள மக்கள் கடந்த 12 மாதமாக சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளனர்.  ஆனால் இன்றுவரை அதனை சரிசெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5-வது வார்டு கிளை செய லாளர் முகமது ஹலிம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தி மார்க்சி ஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா தலை மையில் நகர செய லாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் முத்து உள்ளிட்டவர்கள் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிநீரில் சாக்கடை கலப்பை சரி செய்ய வில்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தபோவதாக  அறி விக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்கும் வகையில் பணிகளை துவக்கியுள்ளனர்.  இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.