districts

img

மூத்த தோழர் கோவிந்தசாமி படத்திறப்பு

விழுப்புரம் ,டிச.25- விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த மூத்த தோழர் சி.ஜி. என்கிற கோவிந்தசாமி படத்திறப்பு நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செஞ்சி, மேல்மலைய னூர் வட்டக் குழுக்கள் சார்பில் நடை பெற்றது. செயலாளர் டி.முருகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த தோழர் கோவிந்தசாமியின் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதா கிருஷ்ணன், எஸ்.வேல்மாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, ஏ.சகாதேவன், விழுப்புரம் கிளை நிர்வாகி கள் பொருளாளர் எம்பி.புருசோத்மன், செய லாளர் ஆர்.சேகர், மூத்த உறுப்பினர் உதய குமார்,மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி, எழில் ராஜா, வி.விஜயகுமார், சி.ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.