சென்னை,ஆக.17-
பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கைதானவர்க ளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் விஷ்ணு (27) என்றும், ஐ.டி. நிறு வனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல, அனகா புத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) ஆகியோரை யும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.