கடலூர்,டிச.12 - இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாண வர்கள் பங்குபெறும் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு கடந்த 29 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் “நிலைப்புறு வளர்ச்சிக்கான அறிவியல்” என்ற கருப்பொருளில் ஆய்வுகளைமேற்கொண்ட மாணவர்க ளின் மாவட்ட அளவிலான மாநாடு விருத்தாசலம் பாத்திமா மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பாலகுரு நாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன் வரவேற்றார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கவுரவத் தலைவருமான ஆர். மோகன் மாநாட்டை துவக்கி வைத்தார். பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் உஷாராணி மற்றும் அறிவியல் இயக்கத்தின் மாநில செய லாளர் ஸ்ரீபன் நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து என்சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வி.சுகுமாரன் நிறைவுரையாற்றினார். மாவட்டம் முழுவதும் 57 குழுக்கள் கலந்து கொண்டதில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மற்றும் பாத்திமா பள்ளியை சேர்ந்த 5 குழுக்கள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்தனர்.
மாவட்ட அளவில் தேர்வு செய்த குழந்தை விஞ்ஞானிகளை பாராட்டி சான்று மற்றும் கேடயம் வழங்கி னர். மேலும் இக்குழுக்கள் வரு கின்ற 28, 29 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான மாநாட்டில் பங்கு கலந்துகொள்வார்கள். இதனை தொடர்ந்து நடந்த 15ஆவது மாவட்ட மாநாட்டில் நெய்வேலி யில் என்எல்சி இந்தியா நிறுவனம் கொள்கை அளவில் வெளியிட்ட “மாவட்ட அறிவியல் மையம்” பணி களை உடனே துவங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் இம்மாநாட்டில் தலைவராக எஸ்.பாலகுருநாதன், செயலாளராக ஆர். தாமோதரன், பொருளாளராக எம்.உதயேந்திரன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.