districts

img

பாலாற்றில் கூடுதல் தடுப்பணை

செங்கல்பட்டு, டிச. 13 மழை நீரை சேமிக்க பாலாற்றில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும்என தமிழ்நாடு அறிவியல் இயக்க செங்கல்பட்டு மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடுஅறிவியல் இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 15 வது மாநாடு ஞாயிறன்று (டிச. 12) திருக்கழுக்குன்றத்தில் ஆ.வீரன் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்ட இணைசெயலாளர் திருகுமரன் வரவேற்றார்.   அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆ.குமார் வேலை அறிக்கையும், மாவட்ட  பொருளாளர் ச.தீனதயாளன்  வரவு செலவு அறிகையும் சமர்பித்தனர்.  மாநில துணைத் தலைவர் உதயன், காஞ்சிபுரம் மாவட்ட கவுரவத் தலைவர் வரகுணபாண்டியன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கெ.முனுசாமி, கழகச் சூழல் சங்கம் நிர்வாகி ஆ.பழனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.தனஞ்செயன் பேசினார். முன்னதாக கால நிலை மாற்றங்களின் அறிவியல், உலக பெருந்தொற்று காலத்தில் கல்வியின் நிலை ஆகிய தலைப்புகளில் நடை பெற்ற கருத்தரங்கங்களில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் மேனாள்  விஞ்ஞானி அ.பகவத்சிங், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் ெஜ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.

தீர்மானங்கள்

மழை நீரை சேமிக்கும் வகையில் பாலாற்றில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிவியல் இயக்கம் வெற்றி பெற செய்ய வேண்டும், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட் பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக கவுரவத் தலைவராக ஜனார்த்தனன், தலைவராக மருத்துவர் சூரியமூர்த்தி, செயலாளராக எம். சிவஞானசம்மந்தம், பொருளாளராக ச.தீனதயாளன், துணை தலைவர்களாக ஆர்.தனஞ்செயன், ம.ஜெயவேலு, ச.வெங்கடேசன், பி.சீனிவாசன், இரா.ஹேமலதா ஆகியோரும்  இணைச் செயலாளர்கள் திருக்குமரன், பொன்கதிரவன்,  அரவிந்த குமார், பி.விக்னேஷ், விமலா. ஆகியோரும், மாவட்ட ஆலோசகர்களாக என்.மாதவன், ஆ. வீரன், ம.பழனி, சீனிவாசன், பேரா. கிள்ளிவளவன்,  மருத்துவர் பானுகோபன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

;