districts

img

பசுமை போர்வையை அதிகரிக்க மரக்கன்றுகள்

விழுப்புரம்,செப்.22- பசுமை போர்வையை அதிகரிக்க விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக மரக்கன்றுகள் நடுவதற்கு நட வடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். விக்கிரவாண்டி அருகே ஆசூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டுள்ளதை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகை யில், “மாவட்டத்தில் பசுமை போர்வையை அதி கரிப்பதற்கும், அரசுக்கு சொந்தமான இடங்களில் அடர் காடுகள், குறுங்காடு கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்த்தல் ஆகியவற்றுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நாற்றுப் பண்ணை அமைக்கப் பட்டுள்ளது” என்றார்.  நாற்றுப் பண்ணைக்காக தலா ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் 2 நாற்றுப்பண்ணை கொட்ட கைகள் அமைக்கப் பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில்பண்ணை குட்டை கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்  தடி நீர்மட்டம் உயர்வ தற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதன் அரு கில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மழைநீர் தேங்கும் வகையில் அகழி யும், அதனருகில் அமைக்கப் பட்ட பேரளவு மரக்கன்றுகள் தற்போது சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் அமைத்திட நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.