districts

img

வையாவூர் ஊராட்சியில் நான்கு மாதமாக துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள பாக்கி

மதுராந்தகம், மே 18-  வையாவூர் ஊராட்சியில் கடந்த நான்கு மாத காலமாக துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் சிஐடியு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் வையாவூர் ஊராட்சியில் கொளப் பாக்கம், வையாவூர், மலை வையாவூர், மூசிவாக்கம், பட்டுவாரி நகர், மாம்பட்டு, பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 20 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் விநியோகிப்பாளர் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.  இதனால் அவர்கள்  கடும் பாதிப்புக்கு உள்ளா கியுள்ளனர். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் ( சிஐடியு)  சார்பில் வையாவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் சங்கத்தின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் வி.திருமலை தலைமையில் வெள்ளியன்று (மே17 )காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விரிகிருஷ்ணன், சிஐடி மாவட்ட  செயலாளர் பகத்சிங் தாஸ், சிபிஎம் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா,  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் வாசுதேவன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சதீஷ், மாவட்ட செயலா ளர் ஜீவானந்தம் மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ் பாரதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்  இரவு 12 மணி வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் அங்கேயே அடுப்பு பற்ற வைத்து கஞ்சி காய்த்து குடித்தனர் இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகி யோர் இரவு 12 மணியளவில் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதிக்குள் நிலுவையில் உள்ள சம்பளம் உடனடியாக வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

;