சென்னை,பிப்.22 - நீதிக்கு அந்நியமாக பல தீர்ப்புகள் வருகின்றன. உரிமைகளை தக்க வைக்க அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மக்களை திரட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கூறினார். 75வது ஆண்டு குடியரசு தின சிறப்புக் கருத்தரங்கம் ராயப்பேட்டையில் நடை பெற்றது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின், சென்னை பகுதி-1ன் சார்பில் நடை பெற்ற இந்நிகழ்வில், ‘இந்திய அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம்’ எனும் தலைப்பில் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசியதன் சுருக்கம் வருமாறு: சுதந்திர நாடுகள் அனைத்துக்கும் குடி யரசு கிடையாது. உல கில் உண்மையான ஜன நாயகத்தை அனுப விக்கும் மக்கள் 7 விழுக்காட்டி னர்தான். இந்தியாவில் ஜன நாயகத்தை போன்ற தோற்றம் தரக்கூடிய ஜன நாயகம்தான் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை கடந்து வாழ்கிற அளவிற்கு தகுதியோடு உள்ளது. சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி, தனி மனித உரிமை, சமூக உரிமை, கல்வி உரிமை, அரசு வேலைவாய்ப்பு உரிமை போன்றவற்றை அரசிய லமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. ‘இருக்கு ஆனால் இல்லை’! அரசியலமைப்புச் சட்டத்தின் படி பொதுத்துறை களை உருவாக்கி, வேலை, இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவற்றில் பணியாற்றியவர்களின் பிள்ளைகள்தான் இந்திய பொருளாதாரத்தை உந்தி தள்ளுகிறவர்களாக மாறினர். அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்ததால் தான் கட்சியும், ஆட்சியும் அடித்தட்டு மக்களை தேடிச்செல்லும் நிலை உரு வானது. தற்போது இதற்கெல்லாம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தைப் போன்று ராணுவ ஆட்சி அமல் படுத்தப்படுவ தில்லை. ஆனால் அதுவே நவீன முறையில் அமல்படுத்தப் படுகிறது. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம், ஊடகம் போன்ற அமைப்பு கள் இருக்கும். ஆனால் செயல்படாது. ஜன நாயகத்திலும் அதிகாரம் இருக்கும். சர்வாதி காரியிடமும் அதிகாரம் இருக்கும். சர்வாதிகாரியின் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. விநோதமான முடிவுகள் அண்மைக்காலமாக நீதிக்கு எதிராக பல தீர்ப்புகள் வருகின்றன. யூ டியூபர் ரன்வீர் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் மனித உறவுக்கு புறம்பாக ஆபாச மாக பேசுகிறார். ஜாமின் கோரும் அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடுமையாக சாடிவிட்டு ஜாமின் தருகிறது. அதே நேரத்தில் ஏழைகள், உரி மைகளுக்காக போராடிய வர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் தீர்ப்ப ளித்த உச்சநீதிமன்ற நீதி பதி, மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்று கூறிவிட்டு, இடித்தவர்களி டம் நிலத்தை தர உத்தர விட்டார். வழிபாட்டு தலங்கள் தொடர்பான வழக்கு இனி எடுக்க முடி யாது. 1948க்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று கூறிவிட்டு, சில குறிப்பிட்ட இடங்களில் அதன் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்ப்பதை சட்டம் தடுக்காது என்கிறார். இதன்விளைவு திருப்பரங்குன்றத்தில் வந்து நிற்கிறது. மதச்சார்பின்மையின் மகத்துவம் உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்தும் மதச்சார்பற்ற நாடுகள்தான். இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகள் எவரும் இன்னொரு இஸ்லாமிய நாட்டிற்கு செல்வதில்லை. மாறாக, மதச்சார்பற்ற நாடுகளை நோக்கியே செல்கின்றனர். ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாசிசம்தான் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அனைத்து நிறு வனங்களும் இருக்கும். ஆனால் ஜனநாயகத்தை, குடியரசை பாதுகாக்கும் நிறுவனங்களாக அவை இருக்காது. இதை எப்படி சமாளிப்பது? நமது உரிமை களை பாதுகாக்க அரசிய லமைப்புச் சட்டத்தை பாது காக்க மக்களை அணி திரட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கிற்கு சென்னை பகுதி-1ன் தலை வர் கே.கிரிதர் தலைமை தாங்கினார். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் எஸ்.மஞ்சுளா வரவேற்றார். அரசியல் சாசன பாது காப்பில் நமது பணி எனும் பொருளில் பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ். ரமேஷ்குமார் உரையாற்றி னார். துணைத்தலைவர் எஸ்.ரவிக்குமார் நன்றி கூறினார்.