சென்னை, மே 12-
2023-24ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 13, 14 ஆகிய தேதி களில், சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சியில் வழங்கப்படும்.
இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி பொறியியல் கல்லூரிகளும் இடம்பெறும். எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும்.
இக்கல்விக் கண்காட்சியில் பங்கேற்கும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு: வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக் கழகம்,
தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம், குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், மாஸ்கோ விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனம், மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக் கழகம். இந்தக் கண்காட்சி தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற உள்ளது. மே 16ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஹோட்டலிலும்; மே 17-ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலி லும்; மே 18-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஹோட்டலிலும், மே 19-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரெஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 9282 221 221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேசிய மருத்துவ ஆணை யத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிப்பதன் வழியாக ரஷ்ய மருத்துவப் படிப்புத் திட்டங்கள் இந்தியாவில் அங்கீ கரிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது
இது குறித்து சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் பேசுகையில், தேசிய தகுதி - நுழைவுத் தேர்வில் ( நீட்) தேர்ச்சி பெற்ற, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40விழுக்காடு மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்பு களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். / பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி , ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை என்றார்.