districts

சென்னை முக்கிய செய்திகள்

மேற்கூரை சரிந்து விழுந்த விவகாரம் பெட்ரோல் நிலையத்திற்கு சீல்

சென்னை, செப்.30- சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.29) மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 7 மணிக்கு சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் நிலை யத்தில் மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது மழைக்காக அங்கு ஒதுங்கி நின்று வாகன ஓட்டிகள் சிலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதையடுத்து சைதாப்பேட்டை, எழும்பூர் அசோக் நகர், தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட னர். இருப்பினும், பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கூரையை அகற்றி, அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் மதுராந்தகத்தை சேர்ந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரி ழந்தார். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேற்கூரை சரிந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார், மேலாளர் வினோத் ஆகி யோர் மீது சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து தொடர்பாக இந்தியன் ஆயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், அந்த பெட்ரோல் நிலையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

திருவள்ளூர், செப்.30- பொதுமக்கள் நலன் கருதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் , அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையிலிருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சாராட்சியர் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஏசியில் வெளியேறிய கரும்புகை: மூச்சுத்திணறி தாய்-மகள் பலி

சென்னை, செப். 30- அம்பத்தூர் ஏகாம்பரம் நகர் கைலாசம் தெருவில் வசித்தவர் ஹகிலா பேகம் (50), இவர் கருக்கு பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளர் வேலை செய்து வந்தார். இவரது மகள் நஸ்ரின் பேகம் (16) அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தனது கணவர் இறந்த நிலையில் ஹகிலா பேகம் தனது மகள் நஸ்ரின் பேகமுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை (செப்.29) இரவு ஏ.சி. போட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை ஏ.சி.யிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.  மேலும் படுக்கை அறையில் தீயும் பற்றிக் கொண்டதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் இருவரின் உடலகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் கொலை செய்த ரவுடி

சென்னை,செப்.30- சென்னை பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியில் வசித்து வந்தவர் எலக்ட்ரீசன் ராஜா, இவர் வெள்ளியன்று (செப்.29) இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எழில் நகர் பகுதியில் ரவுடியான கோபி என்பவர் நண்பர்களுடன் மது போதையில் வீண் தகராறு செய்துள்ளார்.  பின்னர் கத்தியாலும் கற்களாலும் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார்.  இதற்கிடையில் கோபியும் அவரது கூட்டாளியான சத்யா, மகபூப், பாஷா,செல்வம் ஆகிய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பட்டாசு கடை உரிமம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

திருவண்ணாமலை, செப்.30- தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- அடுத்த மாதம் 12 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் கடை அமை விடத்தில்  சாலை வசதி, கொள்ளளவு, 2 வழிகள், சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையில் வரை படம் மற்றும்  கட்டிடத்திற்கான நிலவரைபடம் 6 நகல்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ.600-ஐ எஸ்.பி.ஐ. வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்த மைக்கான அசல் சல, இருப்பிடத்திற்கு ஆதாரம், தற்காலிக பட்டாசு சில்லறை  விற்பனை உரிமம் கோரும் கட்டிடத்திற்கான சொத்து வரி ரசீது, விண்ணப்பத்தாரர் புகைப்படம் -2 (பாஸ் போர்ட் சைஸ்) ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சே பனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இ-சேவையகங்கள் மூலமாகவும் மற்றும் அஞ்சல் அல்லது நேரடியாகவோ வரும் உரிமம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு பள்ளி திறப்பு

சென்னை, செப். 30- புது வண்ணாரப்பேட்டையில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் திறந்து வைத்தார் சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும்  ஸ்வபோதினி தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து சென்னை தண்டை யார்பேட்டையில் உள்ள சென்னை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் மன இறுக்கம் கொண்ட (ஆட்டிசம்) குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி அமைக்கப்படுவதற்கு காமராஜர் துறைமுகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு இப்பள்ளியை நடத்துவதற்கான செலவுத் தொகை ஆண்டுக்கு தலா ரூ. 27 லட்சம் வழங்கிடவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்குத் தேவையான கட்டிட வசதிகள் சென்னை துறைமுகம் இலவசமாக வழங்கி யுள்ளது. இச்சிறப்புப் பள்ளியை சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் திறந்து வைத்து   பேசுகையில், இச்சிறப்பு பள்ளியை நிர்வகிக்க உள்ள ஸ்வபோதினி தொண்டு நிறுவனம் சுமார் 34 ஆண்டுகள் இத்துறை யில் அனுபவம் பெற்றுள்ளது. இங்கு ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், புரிதல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனையுடன் உடற்பயிற்சி சிகிச்சை, தொழில் பயிற்சி, பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இங்கு பயிற்சியை மேற்கொள்ளும் மாண வர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.