கள்ளக்குறிச்சி, ஜூன் 3- பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் காலி குடங்களுடன் திங்க ளன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட் டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தக்குடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்க ளாக முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதனால் அத்தி யாவசிய தேவைக்கு கூட குடிநீர் பயன்படுத்த முடி யாத நிலை இருந்துள்ளது. தடையின்றி குடிநீர் வழங்க கோரி பெண்கள் கூத்தக் குடி-வேப்பூர் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட செய்தனர்.