districts

img

விஐடியில் ரிவேரா’ 24 கலைத் திருவிழா அன்பும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்திய ஐக்கியா நிகழ்ச்சி

வேலூர், மார்ச் 2- வேலூர் விஐடியில் ஆண்டு தோறும் ரிவேரா என்ற சர்வ தேச கலை மற்றும் விளை யாட்டு திருவிழா நடந்து வரு கிறது. இந்த ஆண்டிற்கான ரிவேரா’24 விழா கடந்த 29-2-24 அன்று துவங்கி,  3-3-24 அன்று நிறைவு பெறுகிறது. முதல் மற்றும் 2ம் நாட்களில் நாட்டியம், நடனம், பாட்டுக்கு பாட்டு ,பிரபல திரைப்பட கலை ஞர்களின் இன்னிசை கச்சாரி நடைபெற்றது.  3ம் நாள் அன்று அன்பும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஐக்கியா என்ற நிகழ்ச்சியும் நடந்தது. இந்த ஐக்கியா நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, கோவா, குஜராத், ஹரி யானா, இமாச்சலப் பிரதேஷ், ஜம்மு அண்ட் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளம், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர காண்ட், உத்தர பிரதேஷ் மற்றும் மேற்கு வங்காளம் என மொத்தம் 24 மாநிலங்களை  சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் மாநில பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் நடன மாடி பார்வையாளர்களை உற்சாகப் படுத்தினர். இந்த நிகழ்வில்  800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல் சங்கமம் நிகழ்வில் திரைக்கலைஞர்கள் பங்கேற்று மாணவ, மாணவி களை உற்சாகப்படுத்தினர்.