districts

img

மின்சார சட்டம் 2020யை ரத்து செய்ய கோரிக்கை

மின்சார சட்டம் 2020யை ரத்து செய்ய கோரிக்கை உளுந்தூர்பேட்டை, டிச.2- பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் என அனைவருக்கும் எதிரான மின்சார சட்டம் 2020-ஐ ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஏழாம் ஆண்டுப்பேரவை உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் என்.அருணாசலம் கொடி யேற்றினார்.  மாவட்டத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற பேரவையில் உபதலைவர் ஏ.சம்சுதீன் வரவேற்றும் சி.ஜோதி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினர்.  விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எம்.புருஷோத்தமன் துவக்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் ஆர்.ராஜாமணி செயலாளர் அறிக்கையும், பொருளாளர் ஜி.கண்ணன் நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். ஆர்.அம்பாயிரம் சிறப்புரையாற்றினார். டி.ராஜாராம், பி.பெரிய நாயகி, ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் கே.சீனுவாசன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கே.பார்த்தசாரதி, உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநில உப தலைவர் தங்க.அன்பழகன் நிறைவுரையாற்றினார். எம்.குணசேகரன் நன்றி கூறினார். 20 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவிற்கு தலை வராக கே.ஆறுமுகம், செயலாளராக ஆர்.ராஜாமணி, பொருளாளராக ஜி.கண்ணன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;