districts

img

சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சீரமைப்பு

சிதம்பரம், ஜூலை 5-

      சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அதனை  ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனம் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து கொடுத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் கலந்து கொண்டு கழிவறையை  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர்கள் பெருமாள், பிரவீன் அன்புராஜ், மற்றும் பகுதி மேலாளர் செந்தில்குமார், மேலாளர்கள் சந்துரு, விஜயகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர்  கண்ணகி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.