districts

img

வழுதரெட்டி சுடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றம்

விழுப்புரம், பிப்.27- விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி கிரா மத்தில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்பை நக ராட்சி அதிகாரிகள்  செவ்வாய்க்கிழமை அகற்றி னர். விழுப்புரம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சுடுகாடு சிலரால் ஆக்கிரமிப்பட்டிருந்ததால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் சிரமப் பட்டு வந்தனர், இந்நிலை யில் அந்தப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி உள்ளிட்ட அதி காரிகளிடம் சுடுகாட்டில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதனை அடுத்து விழுப்புரம் நகராட்சி அதி காரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வை யிட்டு அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.